மாணவர்களுக்கு விலையில்லா மடிகணினி மற்றும் சைக்கிள் வழங்கும் விழா
மாணவர்களுக்கு விலையில்லா மடிகணினி மற்றும் சைக்கிள் வழங்கும் விழா
UPDATED : ஆக 18, 2014 12:00 AM
ADDED : ஆக 18, 2014 01:56 PM
அ நிறம் | அளவு
தியாகதுருகம்: தியாகதுருகம் ஒன்றியம், நாகலூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிகணினி மற்றும் சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
நாகலூர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு கலெக்டர் சம்பத் தலைமை தாங்கினார். அழகுவேலுபாபு எம்.எல்.ஏ., கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., குணசேகர், டி.இ.ஓ., தனமணி, ஒன்றிய சேர்மன் பச்சையம்மாள் வைத்திலிங்கம், திட்டக்குழு உறுப்பினர் அய்யப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.
பள்ளி மாணவர்கள் 172 பேருக்கு 35.5 லட்சம் ரூபாய் மதிப்பில் விலையில்லா மடிகணினி, 187 பேருக்கு சைக்கிள்களை அமைச்சர் மோகன் வழங்கி பேசினார்.
