அனைத்து குறுமைய பள்ளி மாணவ, மாணவியருக்கான செஸ் போட்டி
அனைத்து குறுமைய பள்ளி மாணவ, மாணவியருக்கான செஸ் போட்டி
UPDATED : ஆக 20, 2014 12:00 AM
ADDED : ஆக 20, 2014 11:30 AM
கோவை: கோவை மாவட்ட பள்ளிக் கல்வி - உடற்கல்வித் துறை சார்பில், அனைத்து குறுமைய பள்ளி மாணவ, மாணவியருக்கான செஸ் போட்டியில், 192 பேர் 11, 14, 17, 19 வயது அடிப்படையில் பங்கேற்றனர்.
பி.எஸ்.ஜி. சர்வஜனா மேல்நிலை பள்ளியில், 92 போர்டுகள் வைக்கப்பட்டு, ஐந்து சுற்றுகளாக போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு வயது பிரிவிலும், முதல் மூன்று இடங்களை பெறுபவர்கள் மட்டுமே மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுகின்றனர்.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அனந்தலட்சுமி போட்டியை துவக்கினார். பி.எஸ்.ஜி. சர்வஜனா மேல்நிலை பள்ளி உடற்கல்வி இயக்குனர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். தமிழ்நாடு மாநில செஸ் சங்க இணை செயலாளர் விஜயராகவன் முன்னிலை வகித்தார். கணபதி அரசு மேல்நிலை பள்ளி உடற்கல்வி இயக்குனர் செழியன், ஆர்.எஸ்.புரம் மேற்கு மாநகராட்சி பள்ளி உடற்கல்வி இயக்குனர் பழனிச்சாமி, சங்கனுார் மாநகராட்சி பள்ளி உடற்கல்வி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் போட்டியை நடத்தினர்.
