UPDATED : ஆக 21, 2014 12:00 AM
ADDED : ஆக 21, 2014 11:51 AM
அ நிறம் | அளவு
திண்டிவனம்: திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில், மூன்றாம் கட்ட கலந்தாய்வு கூட்டம், வரும் 28ம் தேதி நடக்கிறது.
திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியின் மூன்றாம் கட்ட மாணவர்கள் கலந்தாய்வு வரும் 26ம் தேதி காலை 9.30 மணிக்கு நடக்கிறது. பின்தங்கிய மாணவர்களுக்கான காலியிடம் முதலில் நிரப்பப்படும்.
அதன் பின், மிகவும் பின் தங்கிய, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான காலியிடங்கள் நிரப்பப்படும். இந்த கல்லூரியில் விண்ணப்பித்துள்ள மாணவர்கள் மட்டும் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். இந்த தகவலை கல்லூரி முதல்வர்(பொறுப்பு) உஷா ரகோத்தமன் தெரிவித்துள்ளார்.
