UPDATED : ஆக 21, 2014 12:00 AM
ADDED : ஆக 21, 2014 12:19 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: குருசுக்குப்பம் என்.கே.சி. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரத்த வகை கண்டறியும் முகாம் நடந்தது.
பாரதிதாசன் லயன்ஸ் சங்கம், நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்கத் தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். பள்ளி துணை முதல்வர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., பங்கேற்று, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
