தென்சென்னை சதுரங்க போட்டியில் எட்டு மாணவ, மாணவியர் முதலிடம்
தென்சென்னை சதுரங்க போட்டியில் எட்டு மாணவ, மாணவியர் முதலிடம்
UPDATED : ஆக 21, 2014 12:00 AM
ADDED : ஆக 21, 2014 12:47 PM
கோடம்பாக்கம்: தென்சென்னை மாவட்ட சதுரங்க போட்டியில், எட்டு மாணவ, மாணவியர் முதலிடம் பிடித்தனர்.
தென்சென்னை கல்வி மாவட்ட அளவிலான, பள்ளி சதுரங்க போட்டி, கோடம்பாக்கம் பதிப்பகச் செம்மல் கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. அதில், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மாணவ, மாணவியர் 92 பேர், பங்கேற்றனர்.
ஆண்களில், 11 வயது பிரிவில், அரவிந்த் பிரபு முதலிடத்தையும், சுதர்சன் இரண்டாம் இடத்தையும், சபரீஷ் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். 14 வயது பிரிவில், ரக் ஷித், அஸ்வத், அருண் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
அடுத்து நடந்த, 17 வயது பிரிவில், ஜேரம், ஜோசப், அரவிந்த் அடுத்தடுத்த இடத்தை பிடித்தனர். 19 வயது பிரிவில், நரேன் சுவாமிநாதன் முதலிடத்தையும், டேனியல் ராஜா இரண்டாம் இடத்தையும், ரோகித் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். பெண்களில், 11 வயது பிரிவில், கிளாரா பேடி முதலிடத்தையும், சண்முகதர்ஷினி இரண்டாம் இடத்தையும், ஸ்ரேயா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
14 வயது பிரிவில், ஹர்ஷினி, கீர்த்தனா, திரிஷா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். பதினேழு வயது பிரிவில், ஸ்நேகா, எழிலரசி, பிரியங்கா முதல் மூன்று இடங்களை பிடித்தனர். 19 வயது பிரிவில், நவீனா முதல் இடத்தையும், அபூர்வா இரண்டாம் இடத்தையும், மாலினி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
