தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்தியாவின் நம்பகமான கல்வி நிறுவனங்கள் எவை?

இந்தியாவின் நம்பகமான கல்வி நிறுவனங்கள் எவை?

இந்தியாவின் நம்பகமான கல்வி நிறுவனங்கள் எவை?


UPDATED : ஆக 21, 2014 12:00 AM

ADDED : ஆக 21, 2014 05:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 21, 2014 12:00 AM ADDED : ஆக 21, 2014 05:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: இந்தியாவிலேயே அதி நம்பகமான முதல் 1000 கல்வி நிறுவனங்கள் பட்டியலில், தமிழகத்தின் லயோலா கல்லூரி 3வது இடத்தையும், அண்ணா பல்கலை 4வது இடத்தையும் பெற்றுள்ளன. மேலும், தமிழக அளவில் முதல் 2 இடங்களை இக்கல்வி நிறுவனங்கள் பெற்றுள்ளன.

TRA என்ற அமைப்பு நடத்திய சர்வேயில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சர்வேயின்படி, இந்தியாவில் மிகவும் நம்பகத்தன்மையுள்ள உயர்கல்வி நிறுவனமாக, புதுடில்லியின் இந்து கல்லூரி முதலிடத்தைப் பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தை, ஐ.ஐ.டி., டில்லி பெற்றுள்ளது.

தமிழகத்திலுள்ள எஸ்.ஆர்.எம். உயர்கல்வி நிறுவனம், அகில இந்திய அளவில் 11வது இடத்தையும், தமிழக அளவில் 3வது இடத்தையும் பெற்றுள்ளது. மொத்தம் 1,000 கல்வி நிறுவனங்கள் என்ற பட்டியலில், சென்னையின் பங்களிப்பு மட்டும் 63 என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி, இந்திய அளவில் முதல் 100 அதி நம்பக கல்வி நிறுவனங்களில், 10 கல்வி நிறுவனங்கள் சென்னையைச் சேர்ந்தவை. சென்னையின் பிரசிடென்சி கல்லூரி அகில இந்திய அளவில் 24வது இடத்தைப் பிடித்துள்ளது. புதுக் கல்லூரி 34வது இடத்தில் உள்ளது.

சென்னையின் பாரத் பல்கலை தேசிய அளவில் 65வது இடமும், பனிமலர் பொறியியல் கல்லூரி 72வது இடத்தையும், சத்யபாமா பல்கலை 79வது இடத்தையும் பெற்றுள்ளன.

2014 - 15ம் ஆண்டிற்கான இந்த ஆய்வு, இந்தியாவின் 40 நகரங்களில், சுமார் 7,710 குழுக்களிடம் நடத்தப்பட்டது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பலவிதமான கேள்விகள் கேட்கப்பட்டு, அதனடிப்படையில் ஆய்வு விபரங்கள் முடிவு செய்யப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us