UPDATED : ஆக 22, 2014 12:00 AM
ADDED : ஆக 22, 2014 10:43 AM
விழுப்புரம்: விழுப்புரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர், தேசிய போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் மாணவர் வாமன்(9). இவர் கடந்த 10ம் தேதி நாகப்பட்டினத்தில் நடந்த மாநில பையாத்லான் போட்டியில் பங்கேற்றார்.
பையாத்லான் போட்டியில் இரு விளையாட்டுகளில் ஒருங்கிணைந்து பங்கேற்க வேண்டும். இதன்படி, 500 மீட்டர் ஓட்டம், அடுத்து 50 மீட்டர் நீச்சல், மீண்டும் 500 மீட்டர் தூர ஓட்டம் என போட்டி நடத்தப்பட்டது. இதில், வெற்றிபெற்ற மாணவர் வாமன் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
தேசிய பையாத்லான் போட்டி, மகாபலிபுரத்தில் வரும் 25ம் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது. இதில், பங்கேற்க விழுப்புரம் அரசு நீச்சல் குளத்தில் மாணவர் வாமன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு அரசு நீச்சல் பயிற்சியாளர் அருணா மேற்பார்வையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஊக்கம் தேவை: தேசிய போட்டியில் மாணவர் வாமன் பங்கேற்க தனியார் நிறுவனத்தினர், இவரது பயணசெலவை (ஸ்பான்சர்) ஏற்றுக் கொள்ள முன்வருவோர், 94435 34866 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள் ளலாம் என சங்கத்தின் தலைவர் சிகாமணி, செயலாளர் ராஜலஷ்மி தெரிவித்துள்ளனர்.
