பாலிடெக்னிக் கல்லூரிகளை மேம்படுத்த ரூ 1.80 கோடி ஒதுக்கிய தமிழக அரசு
பாலிடெக்னிக் கல்லூரிகளை மேம்படுத்த ரூ 1.80 கோடி ஒதுக்கிய தமிழக அரசு
UPDATED : ஆக 22, 2014 12:00 AM
ADDED : ஆக 22, 2014 12:27 PM
அ நிறம் | அளவு
சென்னை: தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் பாலிடெக்னிக் கல்லூரிகளை மேம்படுத்த, 1.80 கோடி ரூபாய் ஒதுக்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பாலிடெக்னிக் கல்லூரிகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஏற்கனவே உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில், நவீன இயந்திரங்கள் பொருத்துதல், பழைய இயந்திரங்களை மாற்றி காலத்திற்கேற்ப புதிய இயந்திரங்கள் வாங்குதல், தகவல் தொழில்நுட்ப கற்பித்தல் வசதிகள் ஏற்படுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த வகையில், நாகர்கோவில் மற்றும் தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளின் மேம்பாட்டிற்காக, 1.80 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
