பள்ளி எதிரில் கால்வாயில் தேங்கும் கழிவு நீரினால் சுகாதார சீர்கேடு
பள்ளி எதிரில் கால்வாயில் தேங்கும் கழிவு நீரினால் சுகாதார சீர்கேடு
UPDATED : ஆக 25, 2014 12:00 AM
ADDED : ஆக 25, 2014 12:24 PM
அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள கால்வாயில் தேங்கும் கழிவுநீரினால் சுகாதார சீர்கேடு உருவாகிறது.
மேல்மலையனூர் ஒன்றியம் அவலூர்பேட்டையில் கீழ்பென்னாத்தூர் செல்லும் சாலையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் நுழைவு வாயிலுக்காக கல்வெர்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கீழ்பகுதியில் கழிவு நீர் கால்வாய் செல்கிறது. ஊரிலிருந்து கால்வாய் வழியாக வெளியேறும் கழிவுநீர் ஒரு பக்கத்தில் தேங்கி நிற்கிறது.
இதில் குப்பைகள் நிறைந்து துர் நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு நிலவும் அபாயம் உள்ளது. கழிவுநீர் சரியான முறையில் வெளியேறுவதற்கு போதிய கால்வாய் வசதிகள் செய்யப்படாத நிலையில் பள்ளியின் சுற்றுச்சுவர் ஒரு புறம் இடிந்துள்ளது. மகளிர் பள்ளியின் எதிரில் தேங்கும் கழிவுநீரினால் மாணவிகளுக்கு சுகாதார சீர்கேடு உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. இப்பகுதியில் சுகாதார ஆய்வாளர் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பள்ளி அருகில் கழிவு நீரை தேங்க விடாமல் செல்வதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
