உயர்கல்வி நிறுவனங்களின் தரம் கவலையளிக்கிறது: பிரணாப் முகர்ஜி
உயர்கல்வி நிறுவனங்களின் தரம் கவலையளிக்கிறது: பிரணாப் முகர்ஜி
UPDATED : ஆக 25, 2014 12:00 AM
ADDED : ஆக 25, 2014 02:26 PM
கோல்கட்டா: சர்வதேச தரத்துடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களின் தரம் கவலையளிக்கும் விதமாக உள்ளது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
மேற்கு வங்க மாநிலம், ஹவுராமாவட்டத்தில் உள்ள ஷிவ்பூரில், நாட்டின் முதல் இந்திய பொறியியல், தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.இ.எஸ்.டி) நேற்று துவக்கப்பட்டது.
அதன் துவக்க விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசுகையில், "இந்தியாவில் பட்டம் வழங்கும் பல்கலைக்கழகங்கள் 720, கல்லூரிகள் 37 ஆயிரம் உள்ளபோதும், சர்வதேச அளவில் ஒப்பிடும்போது, அவற்றின் தரம் குறைவாகவே உள்ளது. கடந்த காலங்களில் நளந்தா, தக்ஷஷிலா போன்ற மாபெரும் பல்கலைக்கழகங்களை பெற்றிருந்த இந்தியாவில், சர்வதேச தரவரிசையில் முதல் 200 பல்கலைக்கழகங்களில், இன்று ஒன்று கூட இடம்பெறவில்லை" என தெரிவித்தார்.
