தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிரிட்டனின் அதிபுத்திசாலி என பெயரெடுத்த இந்திய வம்சாவளி மாணவர்!

பிரிட்டனின் அதிபுத்திசாலி என பெயரெடுத்த இந்திய வம்சாவளி மாணவர்!

பிரிட்டனின் அதிபுத்திசாலி என பெயரெடுத்த இந்திய வம்சாவளி மாணவர்!


UPDATED : ஆக 25, 2014 12:00 AM

ADDED : ஆக 25, 2014 03:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 25, 2014 12:00 AM ADDED : ஆக 25, 2014 03:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

லண்டன்: பிரிட்டனில் வாழும், இந்திய வம்சாவளி மாணவர் ஒருவர், தனது முக்கியப் பாடங்களில், வாரிய அளவில், 100% மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். இதன்மூலம், பிரிட்டனின் அதிபுத்திசாலி மாணவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இந்த மாணவரின் பெயர் அசனிஷ் கல்யாணசுந்தரம். கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை ஆகிய பாடங்களில், மிக அதிகபட்ச மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.

18 வயது நிரம்பிய இந்த மாணவர், தனது மதிப்பெண்கள் குறித்து மகிழ்ச்சியடையவதாய் கூறியுள்ளதுடன், கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் சேர்ந்து, மருத்துவம் படிக்கப்போவதாய் கூறியுள்ளார். மருத்துவப் படிப்பில் சேர்வதைப் பற்றி இவர் யோசித்து வந்தாலும், மருத்துவத்தில், எந்த துறையில் specialize மேற்கொள்வது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லையாம்.

இந்த மாணவர், சமீபத்தில், Duke of Edinburgh&'s Gold Award என்ற விருதைப் பெற்றார். மேலும், வரும் நவம்பர் மாதம், லண்டனிலுள்ள புனித ஜேம்ஸ் அரண்மனையில், பிரிட்டன் அரசி எலிசபெத்தின் கணவர் பிலிப்பிடமிருந்து ஒரு விருதைப் பெறவுள்ளார்.

மேலும், தங்க விருது பெற்றவர்களுக்காக நடத்தப்படும் ஒரு விழாவில் பங்கேற்க, லன்காஷைர் கவுன்டி கவுன்சிலால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us