தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கணித பாட ஆசிரியர்களுக்கான 3 நாள் சிறப்பு பயிற்சி

கணித பாட ஆசிரியர்களுக்கான 3 நாள் சிறப்பு பயிற்சி

கணித பாட ஆசிரியர்களுக்கான 3 நாள் சிறப்பு பயிற்சி


UPDATED : ஆக 26, 2014 12:00 AM

ADDED : ஆக 26, 2014 11:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 26, 2014 12:00 AM ADDED : ஆக 26, 2014 11:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: மாணவர்களுக்கு புரியும் வகையில், எளிய முறையில் கற்பிக்க, கணித பாட ஆசிரியர்களுக்கான 3 நாள் சிறப்பு பயிற்சி துவங்கியது.

சிவகங்கை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சிலர் கணிதம், ஆங்கிலம் போன்ற சில பாடங்களில் தோல்வி அதிகரிப்பை தடுக்க, ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்த சிவகங்கை முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளார். கடினமென கருதும் பாடங்களை வகுப்பறையில் மாணவர்களுக்கு எளிய முறையில் கற்றுத்தர உரிய ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம் சார்பில், 9, 10ம் வகுப்புகளில் கணித பாடமெடுக்கும் ஆசிரியர்களுக்கான 3 நாள் சிறப்பு பயிற்சி சிவகங்கையில் துவங்கியது. சி.இ.ஓ., செந்தி வேல்முருகன் துவங்கி வைத்தார்.

மாவட்ட கல்வி அலுவலர் நல்லமுகமது, அனைவருக்கும் இடை நிலைக்கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முக வேல்முருகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்து பாண்டி பங்கேற்றனர். ஜான் பிரிட்டோ, ஜெயக்குமார், கலைத்தங்கம், செல்வம் பயிற்சி அளித்தனர். கலை வாணி, பிரியா ஏற்பாடு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us