தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆகஸ்ட் 29ம் தேதி துவங்குகிறது மதுரை புத்தகக் கண்காட்சி!

ஆகஸ்ட் 29ம் தேதி துவங்குகிறது மதுரை புத்தகக் கண்காட்சி!

ஆகஸ்ட் 29ம் தேதி துவங்குகிறது மதுரை புத்தகக் கண்காட்சி!


UPDATED : ஆக 27, 2014 12:00 AM

ADDED : ஆக 27, 2014 02:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 27, 2014 12:00 AM ADDED : ஆக 27, 2014 02:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மக்களின் அறிவுப் பசியை போக்க, ஆண்டுதோறும் நடைபெறும் புத்தக கண்காட்சி, தமுக்கம் மைதானத்தில் ஆக., 29ல் துவங்கி, பத்து நாட்கள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் அறிஞர்களின் சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகிறது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடக்கும் இந்த 9 வது புத்தக கண்காட்சியில், இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் பங்கேற்கின்றனர். 200க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் 2 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெறுகிறது. மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி மற்றும் சிறுவர்களுக்கு ஓவியப்போட்டியும் நடைபெற உள்ளது.

கண்காட்சி துவக்க விழா ஆக., 29 மாலை 6 மணிக்கு நடக்கிறது. நல்லி சில்க்ஸ் உரிமையாளர் நல்லி குப்புசாமி தலைமை வகிக்கிறார். பாபாசி தலைவர் மீனாட்சி சோமசுந்தரம் வரவேற்கிறார். கலெக்டர் சுப்ரமணியன் துவங்கி வைக்கிறார். மேயர் ராஜன் செல்லப்பா, சினிமா இயக்குனர் மிஷ்கின் பேசுகின்றனர். பாபாசி செயலாளர் புகழேந்தி நன்றி கூறுகிறார். தினமும் மாலை 6 மணிக்கு சொற்பொழிவு நடக்கிறது.

ஆக., 30ல் குன்றகுடி பொன்னம்பல அடிகளார், சுந்தர ஆவுடையப்பன் பேசுகின்றனர்.
ஆக., 31ல் நெல்லை கண்ணன், முனைவர் பா.ஆனந்தகுமார், நா.பாண்டு ரெங்கன் பேசுகின்றனர்.
செப்., 1 ல் கவிஞர் செல்வா, தமிழ் இனியன், சுகிசிவம் பேசுகின்றனர்.
செப்., 2 ல் எழுத்தாளர் வெங்கடேசன், முனைவர் அருணகிரி, கண்ணதாசன், நற்பணி மன்ற தலைவர் சொக்கலிங்கம் பேசுகின்றனர்.
செப்., 3ல் இளசை சுந்தரம், மேடைக்கலைஞர் நன்மாறன், பேராசிரியர்கள் ராஜாராம், சாந்தலிங்கம் பேசுகின்றனர்.
செப்., 4ல் இந்திரா சவுந்தரராஜன் பேசுகிறார். பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியம் தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது.
செப்., 5ல் பேராசிரியர் இரா.மோகன், முனைவர் ராம பாண்டுரங்கன் பேசுகின்றனர்.
செப்., 6ல் திருப்பூர் போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், நடிகர் மல்லூரி, சினிமா இயக்குனர் கரு.பழனியப்பன் பேசுகின்றனர்.
செப்., 7 ல் மாநகராட்சி கமிஷனர் கதிரவன், பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி மணீஸ்வரராஜா, தஞ்சை தமிழ்பல்கலை துணை வேந்தர் திருமலை, உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்., பங்கேற்கின்றனர்.

கண்காட்சி தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். அனுமதி இலவசம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us