தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம் ரூ.1.51 கோடி!

ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம் ரூ.1.51 கோடி!

ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம் ரூ.1.51 கோடி!


UPDATED : ஆக 28, 2014 12:00 AM

ADDED : ஆக 28, 2014 11:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 28, 2014 12:00 AM ADDED : ஆக 28, 2014 11:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,304 பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம் ரூ.1.51 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 934 துவக்க, 210 நடுநிலை, 89 உயர்நிலை, 92 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் கூடுதல் வகுப்பறை, சுற்றுச்சுவர், கழிப்பறை, குடிநீர் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. பராமரிப்பிற்காக ஒவ்வொரு ஆண்டும் மானியம் வழங்கப்படுகிறது.

இதன்படி, நடப்பாண்டில் துவக்கப் பள்ளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம், நடுநிலைப் பள்ளிகளுக்கு வகுப்பறைகளின் அடிப்படையில் தலா ரூ. 10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.21 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் ஒன்றியத்தில் 105 பள்ளிகளுக்கு ரூ.1.94 லட்சம், திருப்புல்லாணியில் 105 பள்ளிகளுக்கு ரூ.1.52 லட்சம், மண்டபத்தில் 130 பள்ளிகளுக்கு 13.31 லட்சம், ஆர்.எஸ்.மங்கலத்தில் 108 பள்ளிகளுக்கு ரூ.12.46 லட்சம், திருவாடானையில் 130 பள்ளிகளுக்கு ரூ.15.56 லட்சம், பரமக்குடியில் 125 பள்ளிகளுக்கு ரூ.14.04 லட்சம், போகலூரில் 53 பள்ளிகளுக்கு ரூ.6.61 லட்சம், நயினார்கோவிலில் 77 பள்ளிகளுக்கு ரூ.9.17 லட்சம், முதுகுளத்தூரில் 123 பள்ளிகளுக்கு ரூ.13.86 லட்சம், கடலாடியில் 180 பள்ளிகளுக்கு ரூ.21.07 லட்சம் என ரூ.ஒரு கோடியே 51 லட்சத்து 59 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது.

இதற்கான காசோலையை பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் முதன்மைக்கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு, அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் சுரேஷ்குமார், ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் ஆகியோர் வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us