வாலிபால் போட்டி - பனிமலர் பொறியியல் கல்லுாரி சாம்பியன்
வாலிபால் போட்டி - பனிமலர் பொறியியல் கல்லுாரி சாம்பியன்
UPDATED : செப் 01, 2014 12:00 AM
ADDED : செப் 01, 2014 10:48 AM
நுங்கம்பாக்கம்: தென்மண்டல அளவிலான வாலிபால் போட்டியில், பனிமலர் பொறியியல் கல்லுாரி அணி, சாம்பியன் பட்டத்தை வென்றது.
தென்மண்டல அளவிலான, 82வது, பெர்ட்ராம் விளையாட்டு போட்டிகள், நுங்கம்பாக்கம் லயோலா கல்லுாரி வளாகத்தில் ஆக., 20ம் தேதி துவங்கி நடந்து வருகின்றன. டென்னிஸ், வாலிபால், மேஜைபந்து, பூப்பந்து, சதுரங்கம், கூடைபந்து ஆகிய போட்டி நடக்கின்றன. 24 பள்ளி அணிகள், 99 கல்லுாரி அணிகள் என, மொத்தம் 123 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. இதில், ஆண்கள் வாலிபால் போட்டி 23ம் தேதி துவங்கி, இறுதி போட்டியுடன் முடிவடைந்தது. பனிமலர், செயின்ட் ஜோசப்ஸ் பொறியியல் கல்லுாரி, லயோலா, விவேகானந்தா, எம்.சி.சி., உள்ளிட்ட, 14 கல்லுாரி அணிகள் பங்கேற்றன.
லீக் மற்றும் நாக்-அவுட் முறையிலும், சூப்பர் லீக் முறையிலும், போட்டிகள் நடந்தன. சூப்பர் லீக் சுற்றுகள் வாலிபால் இறுதி போட்டியில், பனிமலர் அணி, 25-21, 25-23, 26-24, என்ற செட் கணக்கில் செயின்ட் ஜோசப்ஸ் அணியை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றது. செயின்ட் ஜோசப்ஸ் பொறியியல் கல்லுாரி அணி, இரண்டு வெற்றி, ஒரு தோல்வியுடன் இரண்டாவது இடத்தை பெற்றது. ஜமால் முகமது மூன்றாம் இடத்தையும், லயோலா அணி நான்காம் இடத்தையும் பிடித்தன.
