UPDATED : செப் 01, 2014 12:00 AM
ADDED : செப் 01, 2014 12:36 PM
அ நிறம் | அளவு
கோத்தகிரி: கோவை டாடா கன்சல்டன்சி சார்பில், தென்மண்டல அளவிலான, வினாடி-வினா போட்டி நடந்தது.
இப்போட்டியில், 75 பள்ளிகளில் இருந்து 452 அணிகள் பங்கேற்றன. ஜூட்ஸ் பள்ளியை சேர்ந்த அஸ்வின் பிலிப், ஆஷிக் ரெஜி, மோனிகா செல்வராஜ் மற்றும் சஞ்சை பாலாஜி ஆகிய மாணவர்கள் ஆகியோர் பங்கேற்றனர். மொத்தம் 6 அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றன.
இறுதிப் போட்டியில், ஜூட்ஸ் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று, வரும் டிசம்பர் 14ம் தேதி, மும்பையில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றனர். இவர்களுக்கு, மும்பையில் நடைபெறும் தேசிய போட்டியில் பங்கேற்பதற்காக, விமானப் பயணச் சீட்டு மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
