தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெங்களூருவில் நானோ ஆய்வு மையம் விரைவில் தொடக்கம்: விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ்

பெங்களூருவில் நானோ ஆய்வு மையம் விரைவில் தொடக்கம்: விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ்

பெங்களூருவில் நானோ ஆய்வு மையம் விரைவில் தொடக்கம்: விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ்


UPDATED : செப் 02, 2014 12:00 AM

ADDED : செப் 02, 2014 12:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2014 12:00 AM ADDED : செப் 02, 2014 12:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: நாட்டிலேயே முதல்முறையாக பெங்களூருவில் நானோ ஆய்வு மையம் விரைவில் தொடங்கப்படும் என்று பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் தெரிவித்தார்.

இதுகுறித்து பெங்களூருவில் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், "மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் பெங்களூரு நெலமங்களாவில் 14 ஏக்கர் நிலப் பரப்பில் நானோ ஆய்வு மையம் தொடங்கப்படும் என்றும், இந்த மையத்துக்கு நானோ, மென்மைப் பொருள் அறிவியல் மையம் என்று பெயரிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இங்கே பூங்காவும் அமைக்கப்படும். புதிதாக நானோ தொழில் நிறுவனம் தொடங்குவதற்கும் இந்த மையம் உதவி செய்யும். முதல்கட்டமாக ரூ. 50 கோடியில் இந்த மையம் அடுத்த 4 மாதங்களில் செயல்படத் தொடங்கும். நானோ தொழில்நுட்பத்தில் அமெரிக்காவுடன் கூட்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு ராவ் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us