தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்துசமய அறநிலைய மற்றும் தடய அறிவியல் பணிகளுக்கான நேர்காணல்

இந்துசமய அறநிலைய மற்றும் தடய அறிவியல் பணிகளுக்கான நேர்காணல்

இந்துசமய அறநிலைய மற்றும் தடய அறிவியல் பணிகளுக்கான நேர்காணல்


UPDATED : செப் 02, 2014 12:00 AM

ADDED : செப் 02, 2014 03:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2014 12:00 AM ADDED : செப் 02, 2014 03:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை நிர்வாகப் பணி மற்றும் சார்நிலைப் பணி ஆகியவற்றில் அடங்கிய மொத்தம் 12 காலிப் பணியிடங்களுக்கு, கடந்த 2013ம் ஆண்டு மார்ச் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டு, தேர்வில் தேறியவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பும் நிறைவடைந்தது.

இந்நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்னர், நேர்காணலுக்கு தற்காலிகமாக தெரிவுசெய்யப்பட்ட 36 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல், www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கூறிய நேர்காணல் தேர்வு, வரும் 16ம் தேதி, TNPSC அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு தடய அறிவியல் சார்நிலைப் பணி

மேற்கண்ட பணி நிலையின்கீழ் அடங்கிய 33 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த 2013ம் ஆண்டு ஜுன் மாதம் 2ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் வெளியாகி, சான்றிதழ் சரிபார்ப்பும் நிறைவடைந்துள்ளது.

இதனடிப்படையில், தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட 69 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல், www.tnpsc.gov.in என்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நேர்காணல் தேர்வு, செப்டம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில், TNPSC அலுவலகத்தில் நடைபெறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us