நவ.2ல் சிவகங்கை மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தேர்வு
நவ.2ல் சிவகங்கை மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தேர்வு
UPDATED : அக் 25, 2014 12:00 AM
ADDED : அக் 25, 2014 11:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் தேசிய திறனாய்வு (என். டி.எஸ்.இ.,) தேர்வு நவ.2ல் நடக்கிறது.
இதற்கென தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் என்.எஸ்.எம். மேனிலை, அழகப்பா மெட்ரிக்குலேசன், என்.எம்., அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளும், மானாமதுரை ஓ.வி.சி., அரசு மகளிர், திருப்புவனம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, இளையான்குடி மேல பள்ளிவாசல் மகளிர் மேனிலைப் பள்ளி என, 7 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
10-ம் வகுப்பு பயிலும் 2,950 மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதுகின்றனர் என, சி.இ.ஓ., அலுவலகம் தெரிவித்துள்ளது.

