sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சாதிக்கத் துடிக்கும் வாள் சண்டை வீராங்கனை!

/

சாதிக்கத் துடிக்கும் வாள் சண்டை வீராங்கனை!

சாதிக்கத் துடிக்கும் வாள் சண்டை வீராங்கனை!

சாதிக்கத் துடிக்கும் வாள் சண்டை வீராங்கனை!


UPDATED : அக் 26, 2014 12:00 AM

ADDED : அக் 26, 2014 12:04 PM

Google News

UPDATED : அக் 26, 2014 12:00 AM ADDED : அக் 26, 2014 12:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் பவானிதேவி, 23. வாள் சண்டை வீராங்கனை. அவர் மாவட்ட மாநில தேசிய சர்வதேச போட்டிகளில் பங்கேற்று 200க்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்துள்ளார்.

பிலிப்பைன்சின் மணிலா நகரில் ஆசிய வாள் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 23 வயதுக்கு உட்பட்டோர் தனிநபர் பிரிவில் பங்கேற்று, வெள்ளி பதக்கம் வென்றார்.

தனது அடுத்த லட்சியம் குறித்து அவர் கூறியதாவது: அப்பா ஆனந்த் சுந்தர ராமன், அம்மா ரமணி. இரண்டு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள். நான் 10 வயதில் இருந்து வாள் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தேன். 7ம் வகுப்பு படிக்கும்போது நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியில் பங்கேற்று முதல் தங்கத்தை பெற்றேன்.

மலேசியாவில் 2012ம் ஆண்டு நடந்த போட்டியில் குழு போட்டியில் வெள்ளி பதக்கமும் தனிநபர் பிரிவில் வெண்கல பதக்கமும் வென்றேன். கடந்த 2007ம் ஆண்டு துருக்கியில் நடந்த சர்வதேச அளவிலான வாள் சண்டை போட்டியில் இந்திய நேரப்படி சென்றேன். ஆனால் நடுவர்கள் மூன்று நிமிடங்கள் தாமதமாக வந்ததாக கூறி பிளாக் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி விட்டனர். அது எனக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது.

சமீபத்தில் பிலிப்பைன்ஸ் மணிலா நகரில் நடந்த ஆசிய வாள்சண்டை தனி நபர் பிரிவில் பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்றேன். அடுத்த இலக்கு 2016ல் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று, தங்க பதக்கம் வெல்வதுதான். என் லட்சியம். ஆனால் அதற்கான நிதி வசதிகள் என்னிடம் இல்லை. உதவிக்காக எதிர்பார்த்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us