"பாடத்தில் முழுத்தெளிவை பெற்று எடுத்துக்காட்டுடன் போதிக்க வேண்டும்"
"பாடத்தில் முழுத்தெளிவை பெற்று எடுத்துக்காட்டுடன் போதிக்க வேண்டும்"
UPDATED : அக் 26, 2014 12:00 AM
ADDED : அக் 26, 2014 01:52 PM
பரமக்குடி: கமுதக்குடி ஸ்ரீகற்பக விநாயகர் பி.எட். கல்லூரியின் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் மாணிக்கவாசகம் மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அவர் பேசியதாவது: நாம் எந்தச் செயலை செய்யும் போதும் நேசிக்க வேண்டும். மாணவர்களுக்கு பாடத்தை போதிக்கும் போது முழுத்திறமையை வெளிப்படுத்த வேண்டும். மாடு நுனிப்புல் மேய்வதைப் போல் இல்லாமல் அவரவர் பாடத்தில் முழுத்தெளிவை பெற்று எடுத்துக்காட்டுடன் போதிக்க வேண்டும். ஆசிரியர்கள் முதலில் பாடத்தில் தெளிவு பெற்றால்தான் முழு ஈடுபாட்டுடன் கற்றுக்கொடுக்க முடியும்.
மொபைல் இன்டெர்நெட் பயன்பாடு டிவி போன்றவற்றால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க கற்பித்தலின் வாயிலாக அவர்களுக்கு ஒழுக்கத்தை போதிக்க வேண்டும். 50 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கத்தை தந்தனர். அப்போது பணம் இல்லை. தற்போது பணத்தை கொடுத்து ஒழுக்கத்தை கற்றுத்தர மறந்து விடுகின்றனர். மாணவர்களுக்கு கல்வியோடு திறமை உறுதி நம்பிக்கை தைரியம் அன்பு பொதுஅறிவு போன்றவற்றையும் கற்பிக்க வேண்டும் என்றார்.

