UPDATED : அக் 28, 2014 12:00 AM
ADDED : அக் 28, 2014 03:25 PM
புதுடில்லி: 2014-15ம் ஆண்டின் உயர்கல்விக்கான அகில இந்திய சர்வே, மத்திய மனிதவள அமைச்சகத்தால் நடத்தப்படவுள்ளது.
இந்த சர்வே ஆண்டுதோறும் எடுக்கப்படுவதாகும் மற்றும் கணினி அடிப்படையிலானதாகும். கடந்த 2010ம் ஆண்டு முதல் இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
AISHE என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த சர்வேயின் 2011-12ம் ஆண்டிற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதனோடு இணைந்து 2012-13ம் ஆண்டிற்கான தற்காலிக அறிக்கையும் வெளியிடப்பட்டது. இவை இரண்டையும் பொது தளங்களில் பெறலாம்.
AISHE சேவை, கல்வி நிறுவன ஆசிரியர்களின் விபரங்கள், மாணவர் சேர்க்கை, வேறுபட்ட படிப்புகள், அங்கீகாரம், தேர்வு முடிவுகள், கல்வி நிறுவன உள்கட்டமைப்பு, கல்வி நிதி, உதவித்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்கிறது.
இது மூலமாக கிடைக்கப்பெறும் தரவுகளைக் கொண்டு, கல்வி மேம்பாடு தொடர்பான முடிவுகளை மேற்கொள்ள முடியும். கல்வி நிறுவனங்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்படும் இந்த சர்வே அறிக்கை, ஒவ்வொரு ஆண்டும் update செய்யப்படுகிறது.

