UPDATED : அக் 29, 2014 12:00 AM
ADDED : அக் 29, 2014 10:29 AM
காஞ்சிபுரம்: அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் சார்பில், தலைமை பண்பு வளர்த்தல் குறித்த, ஐந்து நாள் பயிற்சி துவங்கியது.
அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, தலைமை பண்பு வளர்த்தல் குறித்த பயிற்சி, ஆண்டுதோறும் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான பயிற்சி காஞ்சிபுரம் மாவட்டத்தில் துவங்கியது.
காஞ்சிபுரம் அரசு நகரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் இந்த பயிற்சியில், 44 அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி நவ., 1ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தலைமை பண்பை எப்படி வளர்ப்பது குறித்து முனைவர் நடராஜன், தலைமை ஆசிரியர் களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

