கிளம்பிய சில நொடிகளில் வெடித்துச் சிதறியது நாசாவின் ஆளில்லா ராக்கெட்
கிளம்பிய சில நொடிகளில் வெடித்துச் சிதறியது நாசாவின் ஆளில்லா ராக்கெட்
UPDATED : அக் 30, 2014 12:00 AM
ADDED : அக் 30, 2014 12:53 PM
வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு தேவையான பொருட்களை ஏற்றிச் சென்ற, அமெரிக்காவின் ஆளில்லா சரக்கு ராக்கெட் ’அன்டார்ஸ்’ கிளம்பிய சில நொடிகளில் தீப்பிடித்து வெடித்துச் சிதறியது.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்காக, ஆர்பிட்டல் சயின்ஸ் கார்ப்பரேஷன், இந்த ராக்கெட்டை தயாரித்திருந்தது. சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில், இரண்டு அமெரிக்கர்கள், ஒரு ஐரோப்பியர் மற்றும் மூன்று ரஷ்யர்கள் உட்பட ஆறு விண்வெளி வீரர்கள் தங்கியுள்ளனர். இவர்களுக்குத் தேவையான பொருட்களை கொண்டு செல்லும் வகையில், 14 அடுக்குகளைக் கொண்ட இந்த ராக்கெட் தயாரிக்கப்பட்டது.
அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள வாலாப்ஸ் பிளைஸ் ஏவுதளத்தில் இருந்து, இந்த ஆளில்லா ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட சில நொடிகளில் வெடித்துச் சிதறியது.
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் உள்ள வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே நான்கு முறை வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ள இந்த ராக்கெட், இம்முறை தீப்பிடித்து வெடித்ததற்கான காரணம் தெரியவில்லை என்றும் நாசா நிறுவனத் தலைவர் டான் ஹாட் கூறியுள்ளார்.

