sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தொழில் துவங்க சுமுகமான நாடுகள் பட்டியல்; இந்தியாவுக்கு 142வது இடம்

/

தொழில் துவங்க சுமுகமான நாடுகள் பட்டியல்; இந்தியாவுக்கு 142வது இடம்

தொழில் துவங்க சுமுகமான நாடுகள் பட்டியல்; இந்தியாவுக்கு 142வது இடம்

தொழில் துவங்க சுமுகமான நாடுகள் பட்டியல்; இந்தியாவுக்கு 142வது இடம்


UPDATED : அக் 30, 2014 12:00 AM

ADDED : அக் 30, 2014 01:07 PM

Google News

UPDATED : அக் 30, 2014 12:00 AM ADDED : அக் 30, 2014 01:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: ’தொழில் துவங்க சுமுகமான சூழ்நிலை நிலவும் நாடுகள்’ என்ற தலைப்பிலான உலக வங்கிபட்டியலில், கடந்த ஆண்டை விட இந்தியா, இரண்டு இடங்கள் வீழ்ச்சி அடைந்து, 142வது இடத்தைப் பிடித்துள்ளது. 189 நாடுகளைக் கொண்ட இந்த பட்டியலில், இந்தியா முதல் 50 இடங்களுக்குள் வர வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்து, ’மேக் இன் இந்தியா’ பிரசாரத்தை செயல்படுத்துகிறார். இந்த நிலையில், இந்தியா 142வது இடத்திற்கு சரிந்திருக்கிறது.

உலக நாடுகளின் தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள், குறிப்பிட்ட ஒரு நாட்டில் முதலீடு செய்யும் முன், அந்த நாட்டில் தொழில் துவங்க ஏற்ற சூழ்நிலை நிலவுகிறதா என்பதை கவனிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்காக, உலக வங்கி அமைப்பு, ஒரு பட்டியலை வெளியிடுகிறது. எந்தெந்த நாடுகளில், தொழில் துவங்க சுமுகமான நிலை, எளிமையான சூழ்நிலை உள்ளது என்பதை, 10க்கும் மேற்பட்ட அடிப்பைட அம்சங்களைக் கொண்டு கணக்கிட்டு, பட்டியல் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், நடப்பு 2014ம் ஆண்டிற்கான பட்டியலை, உலக வங்கி நேற்று வெளியிட்டுள்ளது. அதில், இந்தியா, 142வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டில், 140வது இடத்தில் இருந்தஇந்தியா, இந்த ஆண்டில், இரண்டு இடங்கள் பின்தங்கியுள்ளது. இது, பின்னைடவாக கருதப்பட்டாலும், மே மாதத்தில் பொறுப்பேற்ற பிரதமர் மோடி அரசு மேற்கொள்ளும் திட்டங்கள், முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக வெளியிட்டுள்ள கொள்கை முடிவுகள், புதிய திட்டங்கள் போன்றவை, முதலீட்டாளர்களுக்கு இந்தியா மீதான நம்பிக்கையை அதிகரிக்கலாம் என, உலக வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த பட்டியலில் இந்தியா, அடுத்த ஆண்டில் முன்னேற்றம் அடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டியல் தயாரிப்பு எப்படி?

முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு எவ்விதம் உள்ளது; கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்குவதில் உள்ள முட்டுக்கட்டைகள்; ஒப்பந்தங்களை செயல்படுத்துவது எவ்விதம்; மின்வசதி செய்து கொடுப்பது; சொத்துகளை பதிவு செய்வது; வரி செலுத்துவது எவ்வாறு; வர்த்தக நடைமுறைகளுக்கு உள்ள எல்லை சிக்கல் எவ்வாறு தவிர்க்கப்படுகிறது என்பன போன்ற 10க்கும் மேற்பட்ட அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.

எந்த நாடு; எந்த இடம்:

இந்த பட்டியலில் 88.27புள்ளிகள் பெற்று, தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர், முதல் இடத்தைபிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை தீவு நாடான நியூசிலாந்து, மூன்றாவது இடத்தை தென் கிழக்கு ஆசிய நகரமான ஹாங்காங் பெற்றுள்ளன. ஐரோப்பிய நாடான டென்மார்க் நான்காவது இடத்தையும், தென் கொரியா, ஐந்தாவது இடத்தையும்பிடித்துள்ளது.

அமெரிக்கா ஏழாவது இடத்திலும், பிரிட்டன் எட்டாவது இடத்திலும் உள்ளன. இந்தியாவின் அண்டை நாடான சீனா, 90வது இடத்தை பிடித்துள்ளது. குட்டி நாடுகளான இலங்கை, 99, நேபாளம், 108, மாலத்தீவு, 116, பூடான், 125, பாகிஸ்தான், 128 இடங்களில் உள்ளன. இவை இந்தியாவை விட, பல இடங்கள் முன்னிலையில் உள்ளன.

நம்பிக்கை

இந்த பட்டியலை தயாரித்த, உலக வங்கியின் வளர்ச்சி பொருளாதார அமைப்பின் இயக்குனர் அகஸ்டோ லோபஸ் - கிளாரோஸ், இந்தியாவின் வீழ்ச்சி குறித்து கூறியதாவது: இந்தியாவின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, அரசின் முயற்சிகளை, இந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ள இடம் எவ்விதத்திலும் சிறுமைபடுத்தாது.

இந்த பட்டியல், முந்தைய காரணிகளின் அடிப்பைடயில் தயாரிக்கப்பட்டது. இப்போதைய அரசு பல முன்னேற்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளதால், வரும் ஆண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடையலாம். பிரதமர் மோடி தலைமையிலான அரசு, சிறப்பான முதலீட்டு சூழலை ஏற்படுத்தியுள்ளது. முதலீட்டாளர்களுக்கும், புதிதாக தொழில் துவங்கு வோருக்கும் ஏற்ற சூழ்நிலை அங்கு நிலவுகிறது. அவற்றிற்கு மோடி அரசு உத்வேகம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

முதலீட்டாளர் பாதுகாப்பு இந்தியாவில் அதிகம்:

நடப்பு 2014ம் ஆண்டிற்கான தொழில் துவங்க சுமுக சூழ்நிலை உள்ள நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ள உலக வங்கி, முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பாக உள்ள நாடுகள் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இந்தப்பட்டியலில் இந்தியாவில் பாதுகாப்பு அதிகம் உள்ளதாக, உலக வங்கி தெரிவித்துள்ளது.

தொழில் துவங்க சுமுக சூழ்நிலை நிலவும் நாடுகளின் பட்டியலில், முதல் 10 இடங்களில் உள்ள நாடுகள் பலவற்றில், முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை இல்லை. ஆனால், இந்தியாவில் இது அதிகம் உள்ளது. இந்த வரிசையில் உலகின் ஏழாவது நாடாக இந்தியா விளங்குகிறது. முதலிடத்தில் நியூசிலாந்து உள்ளது.

அடுத்ததாக, ஹாங்காங், சிங்கப்பூர், பிரிட்டன், மலேசியா, அயர்லாந்து நாடுகள் உள்ளன. ஏழாவது இடத்தில் உள்ள இந்தியாவுடன், கனடா, அல்பேனியா நாடுகளும் இணைந்துள்ளன. பிரான்ஸ் 17, அமெரிக்கா 25, ஜப்பான் 35, ஜெர்மனி 51, ஆஸ்திரேலியா 71, சுவிட்சர்லாந்து 78, ரஷ்யா 100, சீனா 132வது இடத்தில் உள்ளது.






      Dinamalar
      Follow us