UPDATED : அக் 30, 2014 12:00 AM
ADDED : அக் 30, 2014 04:01 PM
புதுச்சேரி: உடுமலைப்பேட்டை சைனிக் பள்ளியில், மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வி இயக்குனர் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி நகரில் அமைந்துள்ள சைனிக் பள்ளியில் 2015-16ம் கல்வி ஆண்டில், 6 மற்றும் 9ம் வகுப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு, வரும் 2015 ஜனவரி 4ம் தேதி, லாஸ்பேட்டை வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.
ஆறாம் வகுப்பிற்கு விண்ணப்பிக்க 2015 ஜூலை 1ம் தேதி 10 வயது முடிந்து, 11வயது முடியாமல் இருக்க வேண்டும். 2004 ஜூன் 2ம் தேதி முதல் 2005 ஜூலை 1ம் தேதி பிறந்திருக்க வேண்டும்.
9ம் வகுப்பிற்கு விண்ணப்பிக்க 2015 ஜூலை 1ம் தேதி 13 வயது முடிந்தும் 14 வயது முடியாமலும் இருக்க வேண்டும். 2001 ஜூலை 2 முதல் 2002 ஜூலை 2ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.
விண்ணப்ப படிவம், விளக்க குறிப்பேடு பெற விரும்பும் பொதுப் பிரிவினர் மற்றும் படைத்துறை பிரிவினர் 650 ரூபாய்க்கும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர் 500 ரூபாய்க்கு, அமராவதி நகர், ஸ்டேட் வங்கியில் (கிளை எண் 2119) மாற்றத்தக்க வகையில், ’முதல்வர், சைனிக் பள்ளி, அமராவதி நகர்’, என்ற பெயரில் வரைவோலை (டிடி) எடுத்து, வேண்டுதல் கடிதத்துடன், எந்த வகுப்பிற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்பதையும், எந்த பிரிவை சேர்ந்தவர்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
ஒன்பதாம் வகுப்பு சேர விரும்புவோர் நுழைவுத் தேர்வினை ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும். 6ம் வகுப்பில் சேர விரும்புவோர், நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மொழியையும் (ஆங்கிலம், தமிழ், இந்தி, மற்றும் இதர மாநில மொழிகள்) குறிப்பிட்டு, முதல்வர் சைனிக் பள்ளி, அமராவதி நகர், 642 102, உடுமலைப்பேட்டை திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும், விண்ணப்ப படிவங்களை www.sainikschoolamaravathinagar.edu.in என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கும் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், சைனிக் பள்ளிக்கு, வரும் டிசம்பர் 6ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு புதுச்சேரி அரசு கல்வி உதவித்தொகை வழங்கும். மேலும், விபரங்களுக்கு 04252-256246, 256296 என்ற சைனிக் பள்ளியின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

