பிளஸ் 2 பொதுத்தேர்வு மையம் கேட்டு விருதுநகர் மாவட்டத்தில் 11 பள்ளிகள் விண்ணப்பம்
பிளஸ் 2 பொதுத்தேர்வு மையம் கேட்டு விருதுநகர் மாவட்டத்தில் 11 பள்ளிகள் விண்ணப்பம்
UPDATED : அக் 31, 2014 12:00 AM
ADDED : அக் 31, 2014 11:38 AM
விருதுநகர்: "பிளஸ் 2 பொதுத்தேர்வு மையம் கேட்டு விருதுநகர் மாவட்டத்தில் 11 பள்ளிகள் விண்ணப்பித்துள்ளன. இதை, அரசு தேர்வுகள்துறை இயக்ககத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாக" முதன்மைக் கல்வி அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: செம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி , வெள்ளையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை எஸ்.டி. ஆர்.என்., அரசு மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர் திரு.வி.க.,நகராட்சி மேல்நிலைப்பள்ளி, சோழபுரம் பழனியப்பா மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர் வள்ளுவர் வித்யாலயா, ஸ்ரீவில்லிபுத்தூர் செயின்ட் ஆண்டனி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, சிவகாசிரிசர்வ் லைன் அரசு மேல்நிலைப்பள்ளி, சித்துராஜபுரம் கே.கே.எஸ்.,மேல்நிலைப்பள்ளி, விருதுநகர் ஸ்ரீவித்யா மெட்ரிக்.,மேல்நிலைப்பள்ளி, விருதுநகர் எஸ்.எப்.எஸ்., மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளிகள் பிளஸ் 2 தேர்வு மையம் கேட்டு விண்ணப்பித்துள்ளன. இவை, அரசு தேர்வுகள்துறை இயக்ககத்திற்கு பரிந்துரைக்காக அனுப்பப்பட்டுள்ளன, என்றார்.

