UPDATED : நவ 01, 2014 12:00 AM
ADDED : நவ 01, 2014 10:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி: தெக்கலூரில் உள்ள நிகிதா மெட்ரிக் பள்ளியில், உலக சாரண, சாரணியர் முகாம் மற்றும் கண்காட்சி நடந்தது. திருப்பூர் கல்வி மாவட்ட சாரண சாரணியர் இயக்க செயலர் போஜன் கொடியேற்றினார்.
திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட பள்ளிகளை சேர்ந்த 960 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். நியூசிலாந்து, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான் நாட்டு சாரண, சாரணிய மாணவர்கள், தங்களது கலாசாரம், பண்பாடு, கலை, கல்வி குறித்து தகவல் பரிமாறினர்.
உயர்ந்த பாலத்தில் நடப்பது, டயர் மீது ஏறுதல், கயிறு ஏறுதல், குகைகளை கடந்து செல்லுதல், துப்பாக்கி சுடுதல் போன்ற சாகச நிகழ்ச்சிகளை மாணவர்கள் செய்து காட்டினர்.
சாரண, சாரணியர் இயக்க மாவட்ட பயிற்சி ஆணையர் அமானுல்லா, ஒருங்கிணைப்பு ஆணையர் சிவக்குமரன், உதவி செயலர் தன்சிங் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.

