UPDATED : நவ 01, 2014 12:00 AM
ADDED : நவ 01, 2014 11:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் உள்ள கல்லுாரிகளில், ஒற்றுமைக்கான ஓட்டம் நடந்தது.
சென்னையில் மாநில கல்லுாரி உள்ளிட்ட அரசு கல்லுாரிகளிலும், தனியார் கல்லுாரிகளிலும், முன்னாள், துணை பிரதமர், வல்லபாய் படேலின் பிறந்த நாளான நேற்று, ஒற்றுமைக்கான ஓட்டமும், உறுதியேற்பு நிகழ்வும் நடந்தன.
சென்னை மாநில கல்லுாரியில், நேற்று காலை, 09:00 மணியளவில், கல்லுாரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்ற, ஒற்றுமைக்கான ஓட்டம் நடந்தது. அதன் பின் மாணவர்களும், ஆசிரியர்களும், உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கல்லுாரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், இந்த நிகழ்ச்சி நடந்தது.

