10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் நவ., 7 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் நவ., 7 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
UPDATED : நவ 03, 2014 12:00 AM
ADDED : நவ 03, 2014 11:27 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு கூறியதாவது: ராமநாதபுரத்தில் 2015 மார்ச் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் நவ., 7 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்களும், புனித ஆந்திரேயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண்களும், திருவாடானை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருபாலரும், பரமக்குடி கே.ஜே.எம். மேல்நிலைப் பள்ளியில் ஆண்களும், சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியில் பெண்களும், முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் இருபாலரும் விண்ணப்பிக்க வேண்டும்.
ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் ஆண்களுக்கும், பரமக்குடி சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில் பெண்களுக்கும் அறிவியல் செய்முறை தேர்வுகள் நடத்தப்படும், என்றார்.

