மாநில டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்கும் மாணவிகள் தேர்வு
மாநில டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்கும் மாணவிகள் தேர்வு
UPDATED : நவ 05, 2014 12:00 AM
ADDED : நவ 05, 2014 10:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: மாநில அளவில் நடைபெறவுள்ள டேக்வாண்டோ போட்டியில், தமிழக அணி சார்பில் பங்கேற்கும் மாணவிகளுக்கான தேர்வு போட்டி இன்று முதல் நவ.,7 வரை, ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பிரசாத் கூறியதாவது: இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் சார்பில், தேசிய அளவிலான மகளிர் டேக்வாண்டோ தேர்வு போட்டிகள், நவ.,19 முதல் 23ம் தேதி வரை மத்திய பிரதேசம் ஜபல்பூரில் நடக்கிறது.
இதில், பங்கேற்க உள்ள தமிழக அணி தேர்வு போட்டிகள் இன்று முதல் நவ., 7 வரை ராம நாதபுரத்தில் நடக்கிறது. இன்று 14 வயது பிரிவு, நாளை 17வயது பிரிவு, நவ.,7ல் 19 வயது பிரிவினருக்கான தேர்வு நடக்கிறது, என்றார்.

