UPDATED : நவ 05, 2014 12:00 AM
ADDED : நவ 05, 2014 10:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: தினமலர் செய்தி எதிரொலியால் கமுதி அருகே மண்டல மாணிக்கத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் சுற்றுவேலி அமைக்கப்பட்டுள்ளது.
மண்டலமாணிக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இக்குழந்தைகள் மதிய உணவை பெற்றுக்கொண்டு பள்ளி வளாகத்தில் இடிந்துவிழும் நிலையில் உள்ள கட்டடத்திற்குள் ஆபத்தான நிலையில், உணவருந்தி வந்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக பள்ளி நிர்வாகம், இடியும் நிலையில் இருந்த கட்டட வளாகத்திற்குள் மாணவர்கள் நுழையாத முடியாதபடி, முள்கம்பி வேலி அமைத்தது. இதனால், பதற்றத்தில் இருந்த பெற்றோர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

