"பயிற்சி மூலம் கிராமத்தில் படிக்ககூடிய மாணவர்களைக்கூட விஞ்ஞானிகளாக உருவாக்கலாம்"
"பயிற்சி மூலம் கிராமத்தில் படிக்ககூடிய மாணவர்களைக்கூட விஞ்ஞானிகளாக உருவாக்கலாம்"
UPDATED : நவ 05, 2014 12:00 AM
ADDED : நவ 05, 2014 10:53 AM
போடி: போடி சி.பி.ஏ., கல்லூரியில் இந்திய விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் சார்பில் நடந்த இளம் மாணவ விஞ்ஞானிகளுக்கான பயிற்சி நிறைவு முகாம் போடி சி.பி.ஏ., கல்லூரியில் நடந்தது.
பயிற்சி முகாமில் மதுரை, திண்டுக்கல், தேனிமாவட்டங்களை சேர்ந்த 150 மாணவ,மாணவியர் கலந்து கொண்டனர். இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: உண்மையான அறிவியல் கல்வி, கிராமப்புற மாணவர்களை வைத்து பயிற்சி கொடுப்பதன் மூலம் கிராமத்தில் படிக்க கூடிய மாணவர்களை கூட விஞ்ஞானிகளாக உருவாக்கலாம்.
மாணவர்கள் புதிய சிந்தனை, கடின உழைப்பு, திட்டமிட்டு பொறுமையுடன் ஆர்வம் கொண்டு படிப்பதன் மூலம் மிகப்பெரிய விஞ்ஞானியாக மாற முடியும். இந்தியாவில் எதிர்கொள்ளும் குடிநீர், மின்சார தட்டுப்பாட்டை விஞ்ஞானத்தின் மூலம் தீர்வு காண முடியும், என்றார்.
காந்தி கிராம பல்கலை துணைவேந்தர் நடராஜன் பேசுகையில், "இன்றைய இளைய தலைமுறை விஞ்ஞானிகள் அனைவரும் நீர், மின்சாரம், போக்குவரத்து, தட்பவெப்பநிலை மாற்றம், அணு ஆற்றல் போன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும். நானோ, பயோ தொழில்நுட்பம், உலக இயக்கவியல் தொழில்நுட்பம் போன்றவற்றில் அதிக அளவு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு புதிய சாதனைகளை மாணவர்கள் படைக்க வேண்டும். பொட்டிப்புரம் நியூட்ரினோ ஆய்வு மையத்தின் மூலம் மருத்துவம் சம்பந்தப்பட்ட அறிக்கை மற்றும் உதவிகளை பெறலாம்" என்றார்.

