தேசிய ‘டேக்வாண்டோ போட்டி’; திருப்பூர், சேலம் மாவட்ட மாணவிகள் தகுதி
தேசிய ‘டேக்வாண்டோ போட்டி’; திருப்பூர், சேலம் மாவட்ட மாணவிகள் தகுதி
UPDATED : நவ 06, 2014 12:00 AM
ADDED : நவ 06, 2014 11:23 AM
ராமநாதபுரம்: மாநில அளவிலான ’டேக்வாண்டோ’ போட்டியில், தமிழக அணி சார்பில் பங்கேற்கவுள்ள 14வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான தேர்வு போட்டியில், திருப்பூர், சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.
இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் சார்பில், தேசிய அளவிலான மகளிர் ’டேக்வாண்டோ’ போட்டிகள் நவ., 19 முதல் 23 வரை மத்திய பிரதேசம் ஜபல்பூரில் நடக்கிறது. இதில் பங்கேற்கவுள்ள 14 வயதுக்குட்பட்ட தமிழக அணிக்கான மாணவிகள் தேர்வு போட்டி நேற்று ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்களில் நடந்தது.
திருப்பூர், கடலூர், சேலம், கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, நெல்லை உள்ளிட்ட 32 மாவட்டங்களை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். இதில், 20 கிலோ எடை பிரிவில் சரோன்அங்கீதா (சென்னை), 22 கிலோ எடை பிரிவில் கீர்த்தனா (நெய்வேலி), 24 கிலோ எடை பிரிவில் சுஜித்ரா (நீலகிரி), 26 கிலோ எடை பிரிவில் சாருமதி (சென்னை), 29 கிலோ எடை பிரிவில் சவுமியா (நீலகிரி) உள்ளிட்ட 5 மாணவிகள் முதலிடம் பிடித்தனர். இவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

