ஜவகர் நவோதயா வித்யாலயா நுழைவுத்தேர்வு; விண்ணப்பிக்க காலநீட்டிப்பு
ஜவகர் நவோதயா வித்யாலயா நுழைவுத்தேர்வு; விண்ணப்பிக்க காலநீட்டிப்பு
UPDATED : நவ 06, 2014 12:00 AM
ADDED : நவ 06, 2014 12:26 PM
புதுச்சேரி: பெரிய காலப்பட்டிலுள்ள ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியில், 6ம் வகுப்பு சேர்க்கைக்கு, நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளி முதல்வர் வினையத்தான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பள்ளியின், 2015-16ம் கல்வியாண்டில், 6ம் வகுப்பில் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், அக்டோபர் 31ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
டில்லியிலுள்ள நவோதயா வித்யாலயா சமிதியின் தலைமை அலுவலகத்திலிருந்து வந்த ஆணைப்படி, தற்போது, விண்ணப்பங்கள் புதுச்சேரி கல்வித்துறையின் வட்டாரக் கல்வி அலுவலர்களிடமிருந்து வந்து சேரவேண்டிய கடைசி தேதி, வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

