தேசிய மகளிர் டேக்வாண்டோ போட்டிக்காக சென்னை, நெய்வேலி வீராங்கனைகள் தேர்வு
தேசிய மகளிர் டேக்வாண்டோ போட்டிக்காக சென்னை, நெய்வேலி வீராங்கனைகள் தேர்வு
UPDATED : நவ 07, 2014 12:00 AM
ADDED : நவ 07, 2014 11:21 AM
ராமநாதபுரம்: தேசிய மகளிர் டேக்வாண்டோ போட்டிக்கான தமிழக அணிக்கு சென்னை, நெய்வேலி வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மத்திய பிரதேசம் ஜபல்பூரில் நவ.,19 ல் துவங்க உள்ள தேசிய மகளிர் டேக்வாண்டோ போட்டிகளில் பங்கேற்கவுள்ள தமிழக அணிக்கு 14, 17, 19 வயது பிரிவுகளுக்கான வீராங்கனைகள் தேர்வு ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. 14 வயது பிரிவினர் நவ., 5 ல் தேர்வு செய்யப்பட்டனர்.
17 வயதிற்குட்பட்டோருக்கான தேர்வில், சென்னை சந்தியா (26-32 கிலோ), கோவை கீர்த்தனா (32-25 கிலோ) சேலம் ஸ்னேகா (35-38 கிலோ), நீலகிரி ஸ்ரீநிதி (38-41 கிலோ), சேலம் வித்யா (42-44 கிலோ), நெய்வேலி விஷ்ணுபிரியா (48-52 கிலோ), சென்னை அஜ்மன்ட் பானு (52-56 கிலோ), கோவை சங்கமித்ரா (60-70 கிலோ) ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.

