UPDATED : நவ 07, 2014 12:00 AM
ADDED : நவ 07, 2014 02:35 PM
கோவை: மண்டல அளவில் பள்ளிகளுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில், மாணவ, மாணவியர் அசத்தலாக பங்கேற்றனர்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஜிம்னாஸ்டிக்ஸ், டேகுவாண்டோ, சிலம்பம், ஜூடோ, வாள்சண்டை, குத்துச்சண்டை, டென்னிகாய்ட், நீச்சல், கேரம், ஸ்குவாஷ், சைக்கிளிங், பீச் வாலிபால் ஆகிய புதிய விளையாட்டுகளில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, போட்டிகள் நடக்கின்றன.
கோவை மண்டல பள்ளிகள் உடற்கல்வி துறை சார்பில் பொள்ளாச்சி, கூடலுார், குன்னுார், கோவை ஆகிய கல்வி மாவட்ட அளவில் மாணவ, மாணவியருக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள், நேரு ஸ்டேடியத்தில் நடந்தன. இதில் 30 பள்ளிகளை சேர்ந்த, 14 வயது ஜூனியர், 17 வயது சீனியர், 19 வயது சூப்பர் சீனியர் பிரிவுகளை சேர்ந்த மாணவ, மாணவியர் 152 பேர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.
குறிப்பாக மாணவியர் பிரிவில், டேபிள் வால்ட், அன்ஈவன்பார், பேலன்ஸ்டு பீம், ப்ளோர் எக்சர்சைஸ் ஆகிய போட்டிகளும், மாணவர் பிரிவில் ப்ளோர் எக்சர்சைஸ், டேபிள்வால்ட், பொம்மல் ஹார்ஸ், பேரலல் பார், ரோமன்ரிங்ஸ், ஹாரிசான்ட்டல் பார் ஆகிய போட்டிகளிலும் பங்கேற்றனர்.

