UPDATED : நவ 11, 2014 12:00 AM
ADDED : நவ 11, 2014 11:01 AM
கருத்தரங்கு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சவுடாம்பிகா இன்ஜி., கல்லூரியில், பெண்கள் முன்னேற்ற அமைப்பின் சார்பாக "பெண்களின் நலனுக்கான சட்டங்கள் மற்றும் உரிமைகள்" பற்றிய கருத்தரங்கு நடந்தது. மதுரை ஹை கோர்ட் வக்கீல் தனலட்சுமி இந்தியாவில் பெண்களுக்கான சட்டங்கள் மற்றும் உரிமைகள் பற்றி விளக்கினார்.
குழந்தைகள் அறிவியல் விழா
ராஜபாளையம்: ராஜபாளையம் கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், குழந்தைகள் அறிவியல் விழா இருநாட்கள் நடந்தது.
அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் குழந்தைவேல் பாண்டியன் முன்னிலை வகித்தார். ஜே.சி.ஐ., பட்டய தலைவர் மாடசாமி வரவேற்றார். அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் பரமசிவம் விளக்கினார். கோபால்சாமி எம்.எல்.ஏ., சான்றிதழ் வழங்கினார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் உட்பட பலர் பேசினர்.
பண்பாட்டு போட்டிகள்
தளவாய்புரம்: தளவாய்புரம் மாரிமுத்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் விவேகானந்த கேந்திரம் சார்பில் ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டிகள் நடந்தது. 13 பள்ளிகளின் 309 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கதை சொல்லுதல், வினாடி-வினா, நினைவாற்றல் சோதனை போன்ற பல போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
மாணவர்களுக்கு பயிற்சி
ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில் மெல்ல கற்கும் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட பள்ளி கல்வித்துறை, இடைநிலை கல்வி, அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில் நடந்த முகாமை முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.
தேசிய கல்வி தின நாள் விழா
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தேசிய கல்வி தினம் கொண்டாடப்பட்டது. உதவி தொடக்க கல்வி அலுவலர் பாலமுருகன் தலைமை வகித்தார். கிராம பள்ளிக்குழு தலைவி சீதாலட்சுமி, பள்ளி மேலாண்மை குழு தலைவி கனியம்மாள் முன்னிலை வகித்தார்.

