ஐ.ஐ.டி., சென்னை அறிமுகப்படுத்தவுள்ள புதிய செயல்முறை
ஐ.ஐ.டி., சென்னை அறிமுகப்படுத்தவுள்ள புதிய செயல்முறை
UPDATED : நவ 12, 2014 12:00 AM
ADDED : நவ 12, 2014 03:48 PM
இதுதொடர்பாக கூறப்படுவதாவது: பொதுவாக, இந்திய ஐ.ஐ.டி.,களின் விதிமுறைப்படி, ஒரு மாணவர், ஐ.ஐ.டி. படிப்பில் சேரும் முன்னதாகவே, தனக்கு விருப்பமான பொறியியல் பிரிவை தேர்வுசெய்ய வேண்டும்.
இந்த விதிமுறையில் மாற்றம் செய்யவோ அல்லது திருத்தியமைக்கவோ முடியாத நிலையில், ஐ.ஐ.டி., சென்னை ஒரு புதிய செயல்முறையை அறிமுகப்படுத்தவுள்ளது.
அதன்படி, மாணவர்கள், சேர்க்கை பெறும்போது தேர்வு செய்துகொள்ளும் வகையில், குறைந்தளவு பாடத்திட்டத்தை மட்டும் அறிமுகம் செய்து, அதன்பிறகான காலகட்டத்தில், multi - disciplinary தன்மைக்கொண்ட எலக்டிவ் பாடங்களை, தங்களுக்கு விருப்பமான முறையில் தேர்வுசெய்துகொள்ளும் வகையிலான சுதந்திரத்தை வழங்கக்கூடிய திட்டம் கொண்டுவரப்படவுள்ளது.
அமெரிக்காவிலுள்ள Purdue பல்கலையில் வழங்கப்படும் இளநிலைப் பட்டப் படிப்பின் தாக்கத்தினாலேயே இப்புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

