sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அனுமதியில்லாமல் இயங்கும் அமைச்சரின் பள்ளிகள்; பொது உத்தரவு துறை நோட்டீஸ்

/

அனுமதியில்லாமல் இயங்கும் அமைச்சரின் பள்ளிகள்; பொது உத்தரவு துறை நோட்டீஸ்

அனுமதியில்லாமல் இயங்கும் அமைச்சரின் பள்ளிகள்; பொது உத்தரவு துறை நோட்டீஸ்

அனுமதியில்லாமல் இயங்கும் அமைச்சரின் பள்ளிகள்; பொது உத்தரவு துறை நோட்டீஸ்


UPDATED : நவ 13, 2014 12:00 AM

ADDED : நவ 13, 2014 01:10 PM

Google News

UPDATED : நவ 13, 2014 12:00 AM ADDED : நவ 13, 2014 01:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடக அரசு அனுமதி பெறாமல், பெங்களூருவில், 15 கிளைகளுடன் இயங்கும், ஆந்திர மாநில அமைச்சருக்கு சொந்தமான, ’நாராயணா இ-டெக்னோ’ பள்ளிகளுக்கு, பொது உத்தரவு துறை, ’நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது.

முறைகேடு: பாலியல் குற்றங்களில் சம்பந்தப்பட்ட பள்ளிகளை ஆய்வு செய்தபோது, பெங்களூருவில், பல பள்ளிகள் முறைகேடாக இயங்குவது தெரியவந்தது. அனைத்து பள்ளிகளை பற்றி தகவல் திரட்டப்பட்டது. அப்போது, பெங்களூருவில் மட்டும், 15 கிளைகளை கொண்டுள்ள, ’நாராயணா இ-டெக்னோ’ பள்ளிகள், ஆந்திர மாநில முனிசிபல் நிர்வாகம் மற்றும் நகர திட்டத் துறை அமைச்சர் நாராயணாவுக்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது.

இப்பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பிலிருந்து, ஐந்தாம் வகுப்பு வரை, கன்னடம் முதல் பாடமாக எடுத்து நடத்தப்படும் என, அனுமதி பெற்று, ஆங்கிலத்தை முதல் பாடமாக வைத்து, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்துடன், பிளஸ் 2 வரை நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

வட்டார கல்வி அதிகாரி முனி ரெட்டி, தன் எல்லைக்கு உட்பட்ட, கோரமங்களா, ஹொன்னசந்திரா, ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட்டில் இயங்கி வந்த, நாராயணா இ-டெக்னோ பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஒரு வாரத்திற்குள்...: அரசு விதிமுறைகளை மீறி இயங்கும் இப்பள்ளிகள் ஒரு வார காலத்துக்குள் பதிலளிக்காவிட்டால், பள்ளி நிர்வாகம் மீது, கிரிமினல் வழக்கு தொடரப்படும் என, பொதுத்துறை அறிவித்துள்ளது. பள்ளி இணையதள தகவலின்படி, ஐதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டுள்ள, நாராயண இ-டெக்னோ பள்ளி நிர்வாகத்துக்கு, ஐதராபாத்தில், 35 பள்ளிகள் இருப்பதாகவும், ஆந்திரா முழுவதும், 130 பள்ளிகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

பெங்களூருவில் 15, சென்னையில் மூன்று, புவனேஸ்வரில் ஒன்று என, ஐந்து மாநிலங்களில் மொத்தம், 184 பள்ளிகளை நடத்தி வருவதும் தெரிய வந்தது. பத்திரிகைகளில், தகவல்கள் வெளியானதிலிருந்து, இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. பெற்றோர் தவிப்பில் உள்ளனர்.

சிலர், பள்ளி நிர்வாகத்தினரிடம் சென்று, அரசு அங்கீகாரம் பெற்ற அத்தாட்சிகளை காட்டும்படி கேட்டதற்கு, அவர்கள் எதுவும் பதிலளிக்காததால், இப்பள்ளிகள் அனைத்துமே முறைகேடாக நடத்துவது உறுதியானது. நடவடிக்கை

இப்பள்ளிகளில் முறையாக பாடம் கற்றுத் தரப்படுவதில்லை என்பதுடன், கட்டணமும் அளவுக்கு அதிகமாக வசூலித்து வருகின்றனர் என்ற புகாரும் எழுந்துள்ளது. பொது உத்தரவு துறை எடுத்துள்ள நடவடிக்கைக்கு பின், இப்பள்ளிகள் மீது, அரசு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது.






      Dinamalar
      Follow us