கூடலூரில் நவ., 15ல் தினமலர் கல்விமலர் ‘ஜெயித்துக்காட்டுவோம்’ நிகழ்ச்சி
கூடலூரில் நவ., 15ல் தினமலர் கல்விமலர் ‘ஜெயித்துக்காட்டுவோம்’ நிகழ்ச்சி
UPDATED : நவ 13, 2014 12:00 AM
ADDED : நவ 13, 2014 04:33 PM
கூடலூர்: ‘தினமலர்’ நாளிதழின் ‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சி, கூடலூர் நர்த்தகி அரங்கத்தில் 15ம் தேதி நடத்தப்படுகிறது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்காக, டி.வி.ஆர்., அகாடமி வழங்கும், தினமலர் கல்விமலர், ‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. கூடலூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான நிகழ்ச்சி, கூடலூர் நர்த்தகி அரங்கில், (கோழிக்கோடு சாலை) 15ம் தேதி நடத்தப்படுகிறது.
‘தினமலர்’ நாளிதழ், நேரு குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷசன்ஸ் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சியில், பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவியர், தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதிப்பது குறித்து, ஆசிரியர்கள் விளக்குகின்றனர்.
காலை 9:00 மணி முதல், எஸ்.எஸ்.எல்.சி., (ஸ்டேட் போர்டு) மாணவ, மாணவியருக்காக நடத்தப்படும் நிகழ்ச்சியில், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில், அதிக மதிப்பெண் பெறுவது குறித்து விளக்குகின்றனர். மதியம் 1.00 மணி முதல் பிளஸ் 2 அறிவியல் மற்றும் கலைப் பிரிவு மாணவ, மாணவியருக்காக நடத்தப்படும் நிகழ்ச்சியில், தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், பொருளியல், வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல் பாடங்களில் சாதிக்கும் வழிமுறைகள் குறித்து விளக்குகின்றனர்.
புத்தகங்கள் இலவசம்: ‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, பரீட்சையில் வரும் முக்கிய வினாக்கள் மற்றம் ‘ப்ளூ பிரின்ட்’ அடங்கிய புத்தகம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. இதில், பங்கேற்க, ‘தினமலர்’ நாளிதழில் வெளியாகியுள்ள படிவத்தை மாணவர்கள் பூர்த்தி செய்து, நிகழ்ச்சி அரங்கத்திற்கு கொண்டு வரவும்.

