UPDATED : நவ 14, 2014 12:00 AM
ADDED : நவ 14, 2014 11:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: கர்நாடகா அரசு சார்பில், குழந்தைகள் திரைப்படவிழா, இன்று துவங்கி, வரும் 20ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
கர்நாடகா செய்தி மற்றும் பொது தொடர்புத்துறை முதன்மை செயலர் ஷாலினி ரஜனீஷ் கூறுகையில், ‘தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளுக்கான திரைப்படங்கள், மாநிலத்தின் அனைத்து மாவட்ட மையங்களில், 90 திரையரங்குகளில், சாட்டிலைட் மூலம், ஒரே நேரத்தில் திரையிடப்படும். 10 லட்சம் குழந்தைகள் திரைப்படங்களை காணலாம்.
திரைப்பட விழாவுக்காக, மாநில திரையரங்குகளின் உரிமையாளர்கள் சங்கம், குறைந்த வாடகையில், திரையரங்குகளை வழங்கியுள்ளன,” என்றார். இந்த விழாவில், அமெரிக்கா, சீனா, பிரேசில், மங்கோலியா, செக் குடியரசு, ஈரான், சுவிட்சர்லாந்து, கிரீன்லாந்து என, பல நாட்டு திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

