"தினமலர் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் நூல்களை தொகுத்து வெளியிட திட்டமிட்டுள்ளேன்"
"தினமலர் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் நூல்களை தொகுத்து வெளியிட திட்டமிட்டுள்ளேன்"
UPDATED : நவ 16, 2014 12:00 AM
ADDED : நவ 16, 2014 12:09 PM
தஞ்சாவூர்: "தினமலர் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் நூல்களை தொகுத்து வெளியிட திட்டமிட்டுள்ளேன்" என, தமிழ் பல்கலை துணைவேந்தர் திருமலை, கருத்தரங்கில் பேசினார்.
தஞ்சாவூர் தமிழ் பல்கலையில், இடைக்காலத் தமிழக சமூகத்தின் கல்வெட்டுகள் என்ற தலைப்பிலான தேசியக் கருத்தரங்கம் நடந்தது. இதில், பல்கலை துணைவேந்தர் திருமலை தலைமை வகித்து பேசியதாவது: தமிழக அரசு சார்பில், 2,000 இடங்களில் அகழ்வாராய்ச்சி பணி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில், இந்த பல்கலை தொல்லியல் துறை மூலம், ஏழு இடங்களில், அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் முடிவுகள், நூலாக, வரும் பிப்ரவரி மாதம் வெளியிடப்படவுள்ளது.
மரபு சுவடி
மேலும், தினமலர் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஐராவதம் மகாதேவன், நாகசாமி ஆகியோரின் நூல்களை தொகுத்து வெளியிடவும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு கோடி ரூபாய் செலவில், மரபுச் சுவடிகள், டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளன. சிந்து சமவெளி நாகரிகத்தின் கருத்துகளை தொகுத்து, நூல்களாக வெளியிட திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது, கல்வெட்டுகளில் படிக்கும் திறன் கொண்டவர்கள், குறைந்து வருகின்றனர். எனவே, மாணவர்கள் கல்வெட்டுகளை படிக்க பயிற்சி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

