UPDATED : நவ 18, 2014 12:00 AM
ADDED : நவ 18, 2014 11:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விளையாட்டுத் துறையில் பெயர்பெற்ற, பெக்கத்லான் நிறுவனம், உலகம் முழுவதும் 700, இந்தியா முழுவதும் 16 அங்காடிகளை கொண்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, கோவை நீலாம்பூரில், வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை, விளையாட்டு விழிப்புணர்வு திருவிழா நடத்தப்படுகிறது.
இதில், குதிரையேற்றம், சுவர் ஏறுதல், கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ், ஸ்கேட்டிங், டேபிள் டென்னிஸ், யோகா, டேக்வாண்டோ, ஜூம்பா, குங்பூ, கோல்ப், சைக்ளிங், பாக்ஸிங் உட்பட, 16 விளையாட்டுகள் இடம்பெறுகின்றன.
இந்த திருவிழாவில், யார் வேண்டுமானாலும் பங்கேற்று, விளையாட்டின் நுணுக்கங்கள் குறித்து கற்றுக் கொள்ளலாம். சிறப்பு நிபுணர்கள், இதை கற்றுத் தர உள்ளனர். விபரங்களுக்கு: 0422 - 2978700.

