UPDATED : நவ 19, 2014 12:00 AM
ADDED : நவ 19, 2014 03:36 PM
தேனி: நவ.,21 ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.
தேனி மாவட்ட வேலைவாயப்பு அலுவலகத்தால் நவ.,21 ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் பல தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். பத்தாம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சி, பிளஸ் 2, பட்டபடிப்பு, கம்ப்யூட்டர், மருந்தாளுநர், செவிலியர் படிப்பு முடித்தவர்கள், ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் நர்ஸ்சிங் முடித்தவர்கள் என விருப்பமுள்ள மனுதாரர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம்.
மனுதாரர்கள் அனைத்து கல்விச்சான்றுகளின் நகல்கள் மற்றும் தன் விபரக்குறிப்புடன் நவ., 21 பகல் 2 மணிக்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி வேலைவாய்ப்பு பெற்றிடலாம். இதனால் அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எந்த வகையிலும் பாதிக்காது, என கலெக்டர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

