தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் சார்பில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கான இலவச ஆலோசனை முகாம்

தினமலர் சார்பில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கான இலவச ஆலோசனை முகாம்

தினமலர் சார்பில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கான இலவச ஆலோசனை முகாம்


UPDATED : நவ 22, 2014 12:00 AM

ADDED : நவ 22, 2014 12:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2014 12:00 AM ADDED : நவ 22, 2014 12:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: தினமலர் நாளிதழ் சார்பில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கான இலவச ஆலோசனை முகாம் தேனி பாரஸ்ட்ரோடு அன்னப்பராஜா திருமண மண்டபத்தில் நாளை (நவ., 23) ஞாயிற்றுக்கிழமை காலை 11 முதல் பகல் 1.30 மணி வரை நடக்கிறது.

தமிழக அரசுப் பணியில் உள்ள 4,963 காலிப் பணியிடங்களை நிரப்ப, டிச., 21 ல் குரூப் 4 எழுத்துத்தேர்வை டி.என்.பி.எஸ்.சி., நடத்துகிறது. இத்தேர்வில் மாநிலம் முழுவதும் 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். மாநிலம் முழுவதும் 32 தேர்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. விண்ணப்பதாரர் வசதிக்கு ஏற்ப அந்தந்த மாவட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதலாம்.

அரசு வேலை கனவை நனவாக்கும் வண்ணம் தினமலர் நாளிதழ் சார்பில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 இலவச ஆலோசனை முகாம் தேனி பாரஸ்ட் ரோடு, என்.ஏ., அன்னப்பராஜா திருமண மண்டபத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை (நவ., 23) காலை சரியாக 11 முதல் பகல் 1.30 மணி வரை நடக்கிறது. இதில் மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாச்சலம் மற்றும் நிபுணர்கள் கலந்துகொண்டு, ஆலோசனைகள் வழங்குகின்றனர். இந்த அரிய சந்தர்ப்பத்தை தினமலர் வாசகர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அனுமதி இலவசம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us