தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டேக்வாண்டோ போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் மாநில போட்டிக்கு தகுதி

டேக்வாண்டோ போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் மாநில போட்டிக்கு தகுதி

டேக்வாண்டோ போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் மாநில போட்டிக்கு தகுதி


UPDATED : நவ 25, 2014 12:00 AM

ADDED : நவ 25, 2014 10:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2014 12:00 AM ADDED : நவ 25, 2014 10:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டியில், திருப்பூர் மாவட்ட மாணவ, மாணவியர் அதிக வெற்றிபெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.

மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டி, நாமக்கல்லில் நடைபெற்றது. எடைப்பிரிவு அடிப்படையில் நடந்த இப்போட்டியில், திருப்பூர் மாணவ, மாணவியர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அதிக வெற்றிகளை பெற்றுள்ளனர். இவர்கள், வரும் ஜன., மற்றும் பிப்., மாதங்களில், தூத்துக்குடியில் நடைபெறும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.

வெற்றி பெற்றவர்கள்

14 வயதுக்கு உட்பட்டோர் மாணவர் பிரிவு: நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி மாணவன் கவுதம் (23 - 25 கி., எடைப்பிரிவு), அன்னை மெட்ரிக் மாணவர்கள் பால் சரண் (25-27 கி.,), பிரமோத் குமார் (41-50 கி.,) ஆகியோர் முதலிடம் பெற்றனர். நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி மாணவன் சுனில் (32-35 கி.,); எம்.என்.சி.சி., பள்ளி ஸ்ரீதர் (21-23 கி.,) ஆகியோர் இரண்டாமிடம் பிடித்தனர். மாணவியர் பிரிவில், ஜெய்வாபாய் மாணவியர் சத்யப்ரியா (24-26 கி.,); ராகவேதினி (38 கி.,க்கு மேல்); அன்னை மெட்ரிக் மாணவியர் ஜெபலிதியா (35-38 கி.,); ஸ்நேகாதேவி (26-29 கி.,) ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

17 வயதுக்கு உட்பட்டோர் மாணவர் பிரிவு: சசூரிவித்யா பவன் மாணவன் கார்த்திகேயன் (60-64 கி.,); அன்னை மெட்ரிக் பள்ளி அமல்ராஜ் (41-44 கி.,); வித்யவிகாசினி மாணவன் ஸ்வாகத் சாய் (38-41 கி.,); பிரண்ட்லைன் மாணவன் சபரீஸ்வரன் (56-60 கி.,) முதலிடம் பிடித்தனர். அன்னை மெட்ரிக் சத்தீஸ்வரன் (64-75 கி.,) இரண்டாமிடம் பெற்றார்.

பிஷப் உபகாரசாமி பள்ளி மாணவர் ராஜா (48-52 கி.,); அன்னை மெட்ரிக் மாணவர்கள் வைஷாக் (30-35 கி.,); அக்ஷய் (35-38 கி.,); சூர்யபிரகாஷ் (25-27 கி.,); சிக்கண்ண செட்டியார் பள்ளி மாணவன் மணீஷ் (30-35 கி.,) ஆகியோர் மூன்றாமிடம் பெற்றனர். மாணவியர் பிரிவில் ஜெய்வாபாய் ஆர்த்தி (32-35 கி.,) முதலிடம்; அன்னை மெட்ரிக் ஷீபா செல்சியா (35-38 கி., ) இரண்டாமிடம் பெற்றனர்.

19 வயதுக்கு உட்பட்டோர் மாணவர் பிரிவு: சசூரிவித்யா பவன் சபரீஸ்வரன் (46-50 கி.,) முதலிடம்; விகாஷ் வித்யாலயா சுரேஷ்குமார் (70 கி.,க்கு மேல்); பிரண்ட்லைன் அரவிந்த் (38-46 கி.,) மூன்றாமிடம் பிடித்தனர். மாணவியர் பிரிவில் ஜெய்வாபாய் மாணவியர் கவிப்பிரியா (46-50 கி.,); திவ்யபிரசன்னா (50-54 கி.,); பரிஷாரகீலா (32-40 கி.,); ஆதிலட்சுமி (40-43 கி.,) முதலிடம் வென்றனர். அதே பள்ளியை சேர்ந்த ஆர்த்தி (46-50 கி.,) மூன்றாமிடம் பெற்றார். வெற்றி பெற்றவர்களை, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமலிங்கம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முருகேஸ்வரி, பயிற்சியாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us