மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கையேடு வழங்கும் நிகழ்ச்சி
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கையேடு வழங்கும் நிகழ்ச்சி
UPDATED : நவ 26, 2014 12:00 AM
ADDED : நவ 26, 2014 10:43 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: 10ம்வகுப்பு, பிளஸ் 2வில் மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கையேடு வழங்கும் நிகழ்ச்சி விருதுநகர் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் தலைமை வகித்தார். கலெக்டர் ஹரிஹரன் வழங்கினார். டி.ஆர்.ஓ., முனுசாமி, அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஜெயக்குமார் கூறுகையில், " பாடவாரியாக 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 20,000, பிளஸ் 2 மாணவர்களுக்கு 18,000 கையேடு பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது" என்றார்.
