மாநகராட்சி துவக்கப் பள்ளியில் நடந்த உணவு திருவிழா!
மாநகராட்சி துவக்கப் பள்ளியில் நடந்த உணவு திருவிழா!
UPDATED : நவ 26, 2014 12:00 AM
ADDED : நவ 26, 2014 11:03 AM
திருப்பூர்: மாநகராட்சி துவக்கப் பள்ளியில் நடந்த உணவு திருவிழாவில், இயற்கை உணவுகளை காட்சிக்கு வைத்து குழந்தைகள் அசத்தினர்.
பண்டைய உணவு முறைகள், ஆரோக்கியமாக வாழ உணவின் பங்களிப்பு போன்றவை குறித்து குழந்தைகள் தெரிந்து கொள்ளும் வகையில், உணவு திருவிழா, திருப்பூர் அய்யன்காளிபாளையம் மாநகராட்சி துவக்கப் பள்ளியில், நேற்று நடைபெற்றது.
ஐந்தாம் வகுப்பு மாணவ, மாணவியர் தங்களது வீட்டில் தயாரிக்கப்பட்ட கம்பு தோசை, சுக்கு நீர், சுண்டல், பாயசம், கொள்ளுப்பயறு, களி, சப்பாத்தி, ராகி தோசை, வாழைத்தண்டு கூட்டு, கீரை சோறு உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகளை, பள்ளியில் நடைபெற்ற உணவு திருவிழாவில் காட்சிக்கு வைத்தனர்.
ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகள், உணவு வகைகளை ஆர்வமுடன் கண்டு களித்தனர். மாணவி பவித்ரா முதல் பரிசும், நித்யஸ்ரீ இரண்டாமிடமும், அனுஸ்ரீ மூன்றாம் பரிசும் பெற்றனர்.
