UPDATED : நவ 27, 2014 12:00 AM
ADDED : நவ 27, 2014 10:29 AM
அ நிறம் | அளவு
தியாகதுருகம்: தியாகதுருகம் ஒன்றியத்தில் சத்துணவு மையங்களில் பி.டி. ஓ.,க்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தியாகதுருகம் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் சத்துணவு தரமானதாக தயாரிக்கப்படுகிறதா என்பதை பி.டி.ஓ.,க்கள் மயில்சாமி, சீனுவாசன் ஆய்வு செய்தனர்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டை, உணவு தயாரிக்கும் இடத்தை பரிசோதனை செய்தனர். மாணவர்களின் வருகை பதிவுக்கு ஏற்ற அளவு உணவு தயாரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அளவை சோதனை செய்தனர். சுகாதாரமான முறையில் உணவு சமைத்து கொடுக்க சமையலர், மற்றும் பொறுப்பாளர்களிடம் அறிவுறுத்தினர்.
